50 வயதில் மீண்டும் தந்தையான பிரபு தேவா.. குடும்பத்தில் முதல் பெண் குழந்தை!

சென்னை : நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா மீண்டும் தந்தையாகி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் பிரபுதேவா. இவருடைய நடனத்துக்கும், நடன அமைப்புகளுக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

மாரி படத்தில் வரும் ரவுடி பேபி பாடலுக்கு இவர் நடனம் அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி பல ஆண்டுகளானபோதும், இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் பிரபுதேவா : நடிகர் பிரபுதேவா 1995ம் ஆண்டுன ரமலத் என்பவரல செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். பிரபு தேவா நயன்தாரவை காதலித்து வந்தார். இருவரும் லிவ்விங்டூ ரிலேஷன் ரிப்பில் இருந்தார். அப்போது நயன்தாரா, பிரபுதேவாவின் கையில் பச்சைகுத்தி இருந்தார். இது அப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

பிரிந்தனர் : இது பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், பிரபு தேவா ரமலத்தை விவாகரத்து செய்து பிரிந்தார். இதன் நயன்தாராவை பிரபு தேவா திருமணம் செய்து கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

actor and director prabhu deva blessed with baby girl

இரண்டாவது திருமணம் : இதையடுத்து, 2020ம் ஆண்டு பிரபுதேவா பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபுதேவா முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த போது, அவருக்கு ஹிமானி சிங் தான் சிகிச்சை அளித்து வந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து பெண் வீட்டினர் சம்மதத்துடன் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

மீண்டும் தந்தையானார் : இந்நிலையில், பிரபுதேவாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை பிறந்து சில மாதங்களே ஆனநிலையில், இப்போது தான் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் பிரபுதேவாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே 3 மகன்கள் இருக்கிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.