மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி

நடிகை ஊர்வசி எண்பதுகளின் துவக்கத்தில் இருந்து மலையாளம் மற்றும் தமிழில் கதாநாயகியாக நடித்து வந்தவர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குணச்சித்திர நடிகையாக மாறி இப்போதும் தொடர்ந்து பிசியான நடிகையாக நடித்து வருகிறார். குறிப்பாக தனக்கென தனித்துவமாக உள்ள காமெடி நடிப்பில் தொடர்ந்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென தனிக்கணக்கு துவங்கியுள்ளார் ஊர்வசி. அப்போது தன் மகன் இஷான் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் அவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிடும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த நிலையில் தனது மகள் குஞ்சட்டா மற்றும் மகன் கிஷான் இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஊர்வசி. வழக்கம்போல இந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.