
ஆக்ஷன் படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய கங்கனா
தலைவி படத்தில் நடித்த கங்கனா ரணாவத், தற்போது தமிழில் சந்திரமுகி -2 படத்தில் நடித்துள்ளார். ஹிந்தியில் மணிக்கர்னிகா என்ற படத்தை இயக்கி நடித்த இவர் , தற்போது முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு கதையில் எமர்ஜென்சி என்ற படத்தையும் இயக்கி, நடித்துள்ளார். எமர்ஜென்சி காலகட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஒரு அதிரடியான ஆக்ஷன் கதையில் கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார் கங்கனா. அதற்காக தற்போது தீவிர ஒர்க்கவுட்டில் இறங்கி இருக்கிறார்.
இதுதொடர்பாக தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு, ‛‛இப்போது அடுத்த கதாபாத்திரத்திற்கு செல்ல வேண்டிய நேரம். நகைச்சுவை கலந்த ஆக்ஷனுக்காக மீண்டும் எனது வழக்கமான உடற்பயிற்சிக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார் கங்கனா. இந்த வீடியோ வைரலானது.