13 வயதில் பாலியல் சீண்டலுக்கு ஆளான தனுஷ் பட நடிகை

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். சாவாரியா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தனுஷ் நடித்த ராஞ்ஜனா என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். தற்போது பிளைண்ட் என்ற படத்தில் நடித்து வரும் சோனம் கபூர், தனது 13 வயதில் நடைபெற்ற பாலியல் சீண்டல் குறித்து பேசிய ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில், தனக்கு 13 வயதாக இருக்கும்போது மும்பையில் உள்ள ஒரு தியேட்டருக்கு நண்பர்களுடன் திரைப்படப் பார்க்க சென்றிருந்தபோது, இடைவெளியில் ஸ்நாக்ஸ் வாங்குவதற்கு சென்ற நேரத்தில் கூட்ட நெரிசலில் யாரோ நபர் தன்னுடைய மார்பகங்களை சீண்டியதாகவும் இதனால் தான் பயத்தில் அழுது விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த விஷயத்தை தான் யாரிடத்திலும் சொல்லாமல் இருந்த நிலையில் தானே தவறு செய்து கொண்ட மனநிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சோனம் கபூர். மேலும், ஒவ்வொரு பெண் குழந்தைகளும் தங்களது பருவ வயதில் ஒருவித பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். தாங்கள் குற்றம் செய்தது போன்ற உணர்வுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.