Maaveeran: எழுதி வச்சுக்கோங்க, இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல் பட்டியலில் வண்ணாரப்பேட்டையில வரும்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்திருக்கும் படம் மாவீரன். படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

அடுத்து பவன்கல்யாண் படத்துடன் சந்திக்கிறேன்
படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இரண்டாவது பாடலான வண்ணாரப்பேட்டையில டூயட்டின் லிரிக்கல் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் ஸ்பெஷல் என்னவென்றால் பாடலை கேட்க சூப்பராக இருக்கு, அதை விட சூப்பராக இருக்கு சிவகார்த்திகேயனும், அதிதியும் ஆடிக் கொண்டே பாடுவது.

முதலில் அதிதி பாட ஆரம்பிக்க, சிவகார்த்திகேயன் பாட ரெடியாக, ஆனால் ஹீரோயினோ சீரியஸாக தொடர ஹீரோ லைட்டா கடுப்பாகிவிட்டார். அதன் பிறகு இரண்டும் பேரும் ஒரு வழியாக ராசியாகி பாடினார்கள். அப்படியே அழகாக ஆடினார்கள்.

இருவரின் குரலில் அந்த பாடலை கேட்க அருமையாக இருக்கிறது. இப்போ சந்தோஷம் தாங்கல ஆனாலும் தூங்கல என்னானு கேளு மச்சானு சிவகார்த்திகேயன் பாடுவது அருமையாக இருக்கிறது.

ஹீரோவும், ஹீரோயினுமே இப்படி டூயட் பாட கிளம்பிவிட்டால் சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் என்ன பண்ணுவாங்க மடோன் அஸ்வின்.

இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் வண்ணாரப்பேட்டையில கண்டிப்பாக இடம்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே. 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிக்கும் அந்த படத்திற்காக ஜிம் பாடியாக மாறி, ஹேர்ஸ்டைலையும் மாற்றியிருக்கிறார். அந்த ஹேர்ஸ்டைல் யாருக்கும் தெரியக் கூடாது என்று குல்லா போட்டு சுற்றுகிறார் சிவகார்த்திகேயன்.

Dhanush: 90 நாள், 500 வீடு: ப்ப்பா, வேற மாதிரி பிளான் போட்டிருக்கும் தனுஷ்

அதனால் தான் வண்ணாரப்பேட்டையில வீடியோவிலும் குல்லாவுடன் வந்திருக்கிறார். சிவகார்த்திகேயன், அதிதி சேர்ந்து நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். மாவீரன் படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் கெரியரில் முக்கிய படமாக அமையப் போகிறது மாவீரன்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கார்த்தியின் விருமன் படம் மூலம் நடிகையாக அறிமுகமான அதிதி ஷங்கரின் இரண்டாவது படம் மாவீரன். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதிதிக்கு நன்றாக நடிக்கத் தெரிந்திருப்பதோடு மட்டும் அல்லாமல் சூப்பராக பாடவும், டான்ஸ் ஆடவும் தெரிகிறது.

செம ஜாலி பார்ட்டியான அதிதி ஷங்கரும், கூலான சிவகார்த்திகேயனும் சேர்ந்து நடித்திருப்பதால் மாவீரன் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

முன்னதாக வண்ணாரப்பேட்டையில பாடல் வரப் போகிறது என்று சொல்லி ஒரு வீடியோ வெளியானது. அதில் சித் ஸ்ரீராமுடன் சேர்ந்து டூயட் பாட வேண்டும் என பொய் சொல்லி அதிதியை ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வரவழைத்தார்கள்.

நான் ரொம்ப பிசினு சொன்ன அதிதி, சித் ஸ்ரீராம்னு சொன்னதும் இதோ கிளம்பிட்டேன், வந்துட்டே இருக்கேன், வந்துட்டேனு, சட்டுனு வந்துட்டார். அதே போன்று சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து ஸ்ரேயா கோஷலுடன் டூயட் பாடணும் பிரதர்னு சொல்ல அவரோ இது அவங்களுக்கு தெரியுமா என சந்தேகமாக கேட்டார். எல்லாம் சொல்லியாச்சு, நீங்க பாடுகிறீர்கள் என்று சொல்லிய பிறகும் டூயட் பாட ஒத்துக்கிட்டார் பிரதர் என சிவகார்த்திகேயனிடம் தெரிவித்தார் இயக்குநர்.

ஸ்ரேயா கோஷலுடன் டூயட் பாடப் போறேனே என வீட்டில் பந்தா பண்ணிவிட்டு ஸ்டுடியோவுக்கு ஓடோடி வந்தார் சிவகார்த்திகேயன். உள்ளே சென்று பார்த்தால் ஸ்ரேயா அல்ல அதிதி நின்றார். அதை பார்த்து சிவகார்த்திகேயன் கடுப்பாக, இவர் தான் சித் ஸ்ரீராமா என அதிதி கடுப்பானார்.

ஒரு வழியாக இருவரையும் சமாதானம் செய்து பாடலை பாட வைத்து லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.