பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் குருபுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த 3 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் , வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்பது குறித்து ஆன்லைனில் கற்றுக்கொண்டு, ஆன்லைன் மூலம் கஞ்சா செடி விதைகளை வாங்கியுள்ளனர்.
வீட்டின் ஒரு அறையில் கூடாரம் அமைத்து ஹைடெக் முறையில் செயற்கையாக சூரிய வெளிச்சம் கொண்டுவரும் வகையில் விளக்குகளை அமைத்து கஞ்சா செடி வளர்த்துள்ளனர். செயற்கை காற்றுக்காக 6க்கும் மேற்பட்ட மின்விசிறிகளை அமைத்துள்ளனர்.
கடந்த மூன்றரை மாதங்களாக இவர்கள் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து அதை சக மாணவர்கள் மூலம் வெளியே விற்பனை செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மாணவர்களிடமிருந்து 227 கிராம் கஞ்சா, 1.5 கிலோ எடைகொண்ட கஞ்சா செடி, கஞ்சா விதைகள், 19 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement