சென்னை: மாமன்னன் படத்தின் ப்ரோமோஷனை ஒட்டி படக்குழுவின் பல்வேறு பேட்டிகளை அளித்துவருகின்றனர்.அந்தவகையில் வடிவெலு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.
தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களீல் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை அடையாளம் தெரியாமல் சிதைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு.
வடிவேலுவின் ரீ என்ட்ரி: அதன் காரணமாக சில வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் வடிவேலுவின் நடிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வடிவேலு தன்னை அப்டேட் செய்துகொள்ளவில்லை என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் அவுட் ஆகிவிடுவார் எனவும் வெளிப்படையாக விமர்சனத்தை வைத்தனர் ரசிகர்கள்.
மாமன்னன்: இந்தச் சூழலில் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தாலும் வடிவேலுவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. எனவே மாமன்னன் படத்தில் தனது நடிப்பின் மூலம் தன்னை பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்க வடிவேலு காத்திருக்கிறார்.
ஆட்டம் ஆரம்பம்?: வடிவேலு மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வரும் செய்திகள் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே கொடுக்கின்றன. சந்திரமுகி 2 படத்தில் ஷூட்டிங்குக்கு வடிவேலு ஒழுங்காக செல்லவில்லை என்றும்; ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போடுகிறார் இதனால் பி.வாசு ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் என்றும் சமீபத்தில் தகவல் ஒன்று கோலிவுட்டில் சிறகடித்தது.
எனக்கு பசி: இதுபோன்ற எதார்த்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற பசி எனக்கு இருக்கிறது.. ஒரு படத்தில் வரும் கதாபாத்திரங்களின் அளவை தாண்டக்கூடாது என்பதை நான் பயிற்சியாக எடுத்து கொண்டேன். அது நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலமாக தான் கிடைத்தது. கார் ஓட்றதும் காமெடி பன்றதும் ஒன்று.. கொஞ்சம் மிஸ் ஆனா சரி வராது.. அதுக்கு பயிற்சி தேவைப்படும்.
எளிதாக இருந்தது: நகைச்சுவை நடிகர் என்பதால் இது போன்ற கதாபாத்திரம் நடிக்க எளிதாக இருந்தது. இவர் கொடுத்த கதாபாத்திரம் எனக்கு கச்சிதமா பொருந்தி போச்சு.. என் வாழ்க்கையில் அடிபட்ட காலுக்கு சிகிச்சை செய்தது போல இருந்தது. எனக்கு பிடிச்சது. இதுக்கு மேல ஒரு கதை வந்தா கண்டிப்பா நான் பண்ணுவேன். ஆனா இதுக்கு மேல வரனும். நானும் மாரி செல்வராஜ் கிட்ட அப்படி ஒரு படம் ஒண்ணா பண்ணுவோம் னு கேட்ருக்கேன்.
எனக்கு பள்ளி படிப்பு கிடையாது. இவருக்கு பள்ளி படிப்பு, அனுபவ படிப்பும் இருக்கு அதனால் இவர் எல்லாமே செய்கிறார். நமக்கு அனுபவ படிப்பு மட்டும்தான் தான். அதனால் ரிக்ஷா காரர், குதிரை வண்டிக்காரர்களிடம் இருக்கும்விஷயங்களை நான் பார்த்து உள்வாங்கிடுவேன். அதை படத்தில் கொண்டு வந்துவிடுவேன். இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு” என்றார்.