நடிகர் கமல் ஹாசன், விக்ரம் படத்தில் பணியாற்றிய படக்குழுவினருக்கு பரிசுகள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.
குறிப்பாக லோகேஷ் கனகராஜுக்கு ‘Lexus ES300h’ கார், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் படத்தின் உதவி இயக்குநர்களுக்கு ‘Apache RTR 160’ பைக் என பரிசுகள் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து திரை வட்டாரத்தில் மம்மூட்டி உள்ளிட்ட பலரும் இதுபோல தங்கள் படக்குழுவினருக்குப் பரிசுகளை வழங்கினர்.

சமீபத்தில்கூட கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராகப் பணி செய்துவந்தவர் ஷர்மிளாமிற்கு கமல், புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியது டாக் ஆஃப் தி டவுனாகியிருந்தது.
இதற்கிடையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் `இந்தியன் 2′ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜூலை முதல் வாரத்தோடு படப்பிடிப்பு நிறைவடைகிறது என்று கூறப்படுகிறது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷனில் உட்காருகிறார் ஷங்கர். சில வாரங்கள் ரிலாக்ஸ் ஆகிவிட்டு, அ.வினோத்தின் படத்திற்கு ரெடியாகிறார் கமல் என்கின்றனர்.
இந்நிலையில் `இந்தியன் 2′ படப்பிடிப்பு நன்றாக வந்திருப்பதில் கமல் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல், “‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி…”
‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் @shankarshanmugh
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.… pic.twitter.com/Mo6vDq7s8B
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2023
மேலும், இயக்குநர் ஷங்கருக்குக் கமல் காஸ்ட்லியான ‘PANERAI’ பிராண்ட் வாட்ச்சை பரிசாக வழங்கியுள்ளார். இத்தாலிய தயாரிப்பான இந்த பிராண்ட் வாட்சுகளின் விலை சாதரணமாகவே லட்சங்களில் ஆரம்பிக்கிறது.