ஸ்டாலினுக்கு அண்ணாமலை வைத்த செக்… அப்போ அப்படி சொன்னீங்க? ஆதாரத்துடன் கிடுக்கிப்பிடி!

அதிமுக ஆட்சியின் போது விஜயபாஸ்கருக்கு எதிராக ஸ்டாலின் பதிவிட்ட டிவிட்டை வைத்து விளாசியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

செந்தில் பாலாஜிஅமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்ததால் அவரிடம் இருந்த இலாகாக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
​​தமிழக அரசு அரசாணைஇதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்என் ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்ற பரிந்துரையை ஏற்கவில்லை. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

​​ஆளுநருக்கு அதிகாரம் இல்லைஇந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார். மேலும் இதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

​​அண்ணாமலை டிவீட்இதையடுத்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெற்றது ஆளுநர் மாளிகை. இந்நிலையில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் குழுவில் இருந்து தமிழக ஆளுநர் டிஸ்மிஸ் செய்தது குறித்து தமிழக பாஜக தனது கருத்துக்களை தற்போது ஒதுக்கியுள்ளது.​​

ஸ்டாலின் இரட்டைப் பேச்சுஇருப்பினும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது இரட்டைப் பேச்சை நினைவுபடுத்த விரும்புகிறது. 2018 ஆம் ஆண்டில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். அப்போதும் இப்போதும் என்ன மாறிவிட்டது?
​​திமுகவின் நாடகம் மாற்றாதுசெந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பதை திமுகவின் நாடகம் மாற்றாது என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை. மேலும் அப்போது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யக்கோரி ஆளுநருக்கு கோரிக்கை விடுத்த டிவிட்டுகளையும் அண்ணாமலை ஆதாரமாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.​​
​அண்ணாமலை கிடுக்கிப்பிடி​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.