ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் பரபரப்பாக பல படங்களில் நடித்து வருகின்றார். தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற ரோலில் நடிக்கின்றார் ரஜினி. பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினி லால் சலாம் என்ற படத்தில் முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
ப்ராஜெக்ட் கே
இந்நிலையில் இவ்விரு படங்களுக்கு பிறகு ரஜினி ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினி முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது.
Maamannan: மாமன்னன் சக்ஸஸ் மீட்டில் வடிவேலு பங்கேற்காதது ஏன் ? மீண்டும் வெடித்த சர்ச்சை..!
இதையெல்லாம் தாண்டி ரஜினி லோகேஷின் இயக்கத்தில் தலைவர் 171 என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதுவே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ரஜினி நடிக்க இருந்த ஒரு படத்தில்
கமல்
நடிக்க இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் செம வைரலாக பரவி வருகின்றன.
அதாவது பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாக்கும் திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. இப்படத்தில் கமல் வில்லனாக நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக கமல் 150 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தில் கமலின் கதாபாத்திரத்தில் முதலில் ரஜினி தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் பிரபாஸ் தான் ரஜினி வேண்டாம் என கூறியதாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது ரஜினி இந்திய சினிமாவில் ஒரு ஐகான். அவர் தற்போது இருக்கும் சூழலில் வில்லனாக நடித்தால் அது சரியாக இருக்காது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஆனால் கமலும் ஒரு ஐகானாக இருந்தாலும் அவர் வில்லனாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனவே கமலே நடிக்கட்டும் என பிரபாஸ் கூறியதாக ஒரு தகவல் வந்துள்ளது. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.