Vijay 68 – விஜய் 68 படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?.. ஐந்து வருடங்களுக்கு பிறகு நடக்கப்போகிறதா?

சென்னை: Vijay 68 (விஜய் 68) விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கப்போகும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். பீஸ்ட் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தைத் தொடர்ந்து லியோவில் அவர் நடித்துவருவதால் இந்தப் படம் கட்டாயம் ஹிட்டாக வேண்டும் என விஜய்யும், அவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களும் ஹிட்டாகியிருப்பதால் லியோவும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடையே இருக்கிறது.

விஜய் 68: விஜய் லியோவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது 68ஆவது படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. முதலில் தெலுங்கிலிருந்து ஒரு இயக்குநர் இயக்குவார் என கூறப்பட்ட சூழலில் ஏஜிஎஸ் பேனரில் விஜய்யை வெங்கட் பிரபு இயக்குவார் என்ற அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்துக்கு பிறகு அவர் விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கதை?: வெங்கட் பிரபு அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதேபோல் விஜய்க்கும் ஒரு தரமான படத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அரசியல் களத்தை அடிப்படையாக வைத்துதான் விஜய் படம் உருவாகும் என்று கூறப்பட்ட சூழலில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்துதான் படம் உருவாகிறது என்று லேட்டஸ்ட் தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

பெயர் என்ன?: அதேபோல் வெங்கட் பிரபு இயக்கும் படங்களின் பெயர்கள் எப்போதும் கவனம் ஈர்ப்பவை. எனவே விஜய் படத்துகு என்ன பெயர் வைக்கப்போகிறார் என்ற பேச்சும் ரசிகர்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி படத்துக்கு சிஎஸ்கே என பெயர் வைக்கப்படவிருப்பதாக அரசல் புரசலாக பேச்சு எழுந்துள்ளது. ஆனால் அந்தப் பெயரை வைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.

எப்போது ரிலீஸ்?: இந்நிலையில் விஜய் 68 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படம் அடுத்த வருட தீபாவளிக்கு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. பிகில் படத்துக்கு பிறகு விஜய் நடித்த மாஸ்டர், வாரிசு ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகவில்லை. அதேபோல் லியோ படமும் தீபாவளிக்கு வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவுஸ் அரெட்ஸ்: இதற்கிடையே விஜய் 68 படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதனை கேள்விப்பட்ட வெங்கட் பிரபு உச்சக்கட்ட டென்ஷன் ஆகி தனது உதவி இயக்குநர்களிடம் யாரும் வீட்டுக்கு போக வேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டுவிட்டார் என்று சமீபத்தில் பேச்சு எழுந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.