சென்னை டூ நெல்லை: வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ்… என்னது நிஜமாவா, எப்ப தெரியுமா?

இந்தியாவின் அதிவேக ரயில் என்று பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். கொஞ்சம் கூட அதிர்வே தெரியாமல் விமானத்தில் செல்வது போன்ற உணர்வு, அதிநவீன அம்சங்கள், குளு குளு வசதி என பயணிகள் தங்கள் அனுபவங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்இதுவரை 23 ரயில் சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் சென்னைக்கு இரண்டு சேவைகள் கிடைத்துள்ளன. அவை சென்னை டூ மைசூரு, சென்னை டூ கோவை ஆகியவை ஆகும். அடுத்தகட்டமாக வரும் ஜூலை 7ஆம் தேதி கோரக்பூர் டூ பிரயாக்ராஜ், விஜயவாடா டூ சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் டூ திருப்பதி ஆகிய ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.சென்னை டூ திருப்பதி ரயில் சேவைஆனால் சென்னை டூ திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் சோதனை ஓட்டம், ரயில் பெட்டிகள் தயாரிப்பு உள்ளிட்டவை காரணமாக மேற்குறிப்பிட்ட தேதியில் வராது எனக் கூறுகின்றனர். இதுவரை அமல்படுத்தப்பட்ட அனைத்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் 8 அல்லது 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கின்றன. இதில் படுக்கை வசதிகள் கிடையாது.
​படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஆனால் தொலைதூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளுக்கு சில அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மகிழ்ச்சியூட்டும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, வரும் பிப்ரவரி – மார்ச் 2024ல் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறுகின்றனர்.
ICF ரயில் பெட்டி தொழிற்சாலைஅதாவது பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரம் என்கின்றனர். இதற்கான வேலைகள் சென்னை ஐ.சி.எஃப்பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் ஒரே ஒரு ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் பெட்டி, 4 ஏசி டயர் – 2 பெட்டிகள், 11 ஏசி டயர் – 2 பெட்டிகள் இடம்பெறும்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்க்கு போட்டிஇது தொலைதூர ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாக விளங்கும் என்கின்றனர். அதேசமயம் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் சாமானியர்கள் பயணிப்பது கேள்விக்குறி தான் எனத் தெரிகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் சேவை எந்தெந்த நகரங்களுக்கு கிடைக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.
​சென்னை டூ நெல்லை ரயில் சேவைஇதற்கிடையில் முதல்கட்ட அறிமுகத்திலேயே தமிழகத்திற்கு ஒரு ரயில் கிடைத்துவிடும் என்ற பேச்சு அடிபடுகிறது. அதுவும் நம்ம சென்னைக்கு என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 2024ல் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக பேசி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.