மச்சிலிப்பட்டணம், கனடாவில் மேற்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்த ஆந்திர இளைஞர், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டணத்தை அடுத்த சிந்தகுண்டாபாலத்தைச் சேர்ந்தவர் நாக குமார், 23.
இவர், மேற்படிப்புக்காக வட அமெரிக்க நாடான கனடாவுக்கு 2021ல் சென்றார்.
அங்கு, ஓண்டாரியோவில் உள்ள தண்டர்பே என்னும் இடத்தில் தங்கியிருந்த நாக குமார், பகுதி நேரமாக உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், தண்டர்பே பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக, மூன்று நண்பர்களுடன் அவர் நேற்று சென்றுள்ளார்.
ஆழமான பகுதிக்கு சென்ற அவர், வெளியேற முடியாததை அடுத்து, நீரில் மூழ்கி பலியானார். நாக குமார் இறந்த தகவல், ஆந்திராவில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரின் உடலை இந்தியாவுக்கு விரைவாக எடுத்து வர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement