மாஸ்கோ: ரஷ்ய புலனாய்வு பெண் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரஷ்யாவின் முன்னணி பத்திரிகை ஒன்றில் புலனாய்வு பெண் நிருபராக பணியாற்றி வருபவர் எலினா மிலாஷினா, நேற்று தனது வழக்கறிஞருடன் காரில் சென்யா மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அவர்கள் சென்றுகொண்டிருந்த காரை வழிமறித்து கொடூரமாக தாக்கியதுடன், பெண் நிருபர் தலையை மொட்டையடித்தும் கைவிரல்கள், பற்களை உடைத்து சித்ரவைதை செய்தனர். இதனால் சுயநினைவிழந்தார்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இத்தாக்குதலை செசன்ய பிரிவினைவாத அமைப்பினர் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் உலக பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்ட ன தாக்குதல் என கண்டனம் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement