Genie: 'ஜீனி' ஜெயம் ரவிக்கு ஜோடியான விஜய் சேதுபதி 'மகள்': இன்று நடந்த பூஜை

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘ஜீனி’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அர்ஜுனன் ஜெ.ஆர். இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஜீனி’. இதில் க்ரித்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

கலை இயக்கத்தை உமேஷ் ஜெ. குமார் கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை சர்வதேச சண்டை பயிற்சி கலைஞரான யானிக் பென் அமைக்க, ஸ்வப்னா ரெட்டி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக கே. அஸ்வின் குமாரும், கிரியேட்டிவ் ப்ரொடியூசராக கே. ஆர். பிரபுவும் பணியாற்றுகிறார்கள்.

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் ‘ஜீனி’, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25 வது படம் என்பதால் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராவதுடன், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் பொன்னியின் செல்வன் 2. அந்த பட விளம்பர நிகழ்ச்சிகளில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்த ஜெயம் ரவியை ஜீனி விழாவில் பெப்பர் லுக்கில் பார்த்த ரசிகர்கள் இம்பிரஸ் ஆகிவிட்டார்கள்.

ஜீனி என்கிற பெயரே வித்தியாசமாக இருக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிப்பதற்கு பெயர் போனவர் ஜெயம் ரவி. அதனால் அர்ஜுனன் ஏதோ வித்தியாசமான கதையை சொல்லித் தான் ஜெயம் ரவியை இம்பிரஸ் செய்திருக்க வேண்டும். ஜீனி படம் வெற்றி பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே ஜீனி பட விளம்பர நிகழ்ச்சிகளுக்காக வெயிட்டிங் என பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சிகளில் ஹக் மிஸ் செய்த ரசிகைகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் ஹக் வேண்டும் என ரசிகைகள் கேட்க, மேடையில் இருந்து குதித்து வந்து ஹக் செய்தார் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.

Leo: லியோ ஷூட்டிங் முடிந்ததும் ரூ. 15 கோடியுடன் வெளிநாடு கிளம்பும் லோகேஷ் கனகராஜ்

ஜீனி படத்தில் நடிக்கும் க்ரித்தி ஷெட்டி உப்பேனா தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனவர். அந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்தார். அதில் இருந்து அவரை விஜய் சேதுபதியின் மகள் என்றே தமிழ் ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

க்ரித்தி ஷெட்டி நடிப்பில் அண்மையில் வெளியான படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் நாக சைதன்யாவின் காதலியாக நடித்திரு்தார். கஸ்டடி படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸானது.

கஸ்டடியை அடுத்து தளபதி 68 பட வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு. க்ரித்தி ஷெட்டியோ ஜீனி பட ஹீரோயினாகிவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.