லண்டன், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சஜு, 50. இவரது மனைவி அஞ்சு, 30. இருவரும் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் நார்தம்டன் நகரில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு ஜீவா, 6, என்ற மகனும், ஜான்வி, 4, என்ற மகளும் இருந்தனர்.
கடந்தாண்டு சஜுவுக்கும், அஞ்சுவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் சஜு, கத்தியால் குத்திக் கொன்றார்.
இது தொடர்பான வழக்கு நார்தம்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சஜு கொலை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு நேற்று ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரிட்டன் சட்டத்தின்படி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம், 40 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement