புதுடில்லி, நாடு முழுதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதர காய்கறிகளின் விலைகளும் உச்சம் தொட துவங்கியிருப்பது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தக்காளி கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுவதை அடுத்து, ரேஷனில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையை மாநில அரசு துவங்கி உள்ளது.
புதுடில்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை கிலோ 130 – 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
பீஹார் தலைநகர் பாட்னாவில் மே மாதம் முதலே காய்கறி விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது.
தக்காளி மட்டுமின்றி காலிபிளவர், முட்டைகோஸ், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ 60 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் 30 – 35 சதவீதம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் தற்போது 300 – 350 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஒடிசாவிலும் கடந்த 15 நாட்களாக காய்கறி விலை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தக்காளி கிலோ 160 ரூபாய்க்கும், இஞ்சி கிலோ 300 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. புதுடில்லி, உ.பி.,யிலும் இதே நிலை தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement