சென்னை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் டீ ஷர்ட்டின் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.
பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஷாருக்கான். கடைசியாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஜீரோ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியானது.
மகத்தான வெற்றி: பதான் திரைப்படம் வெளியாகும் முன்பே தீபிகாபடுகோனேவின் பிகினி பாடலால் பல சர்ச்சைகளில் சிக்கியது. அதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்து. இதையடுத்து, 7500 திரையரங்குகளில், குடியரசு தினத்தை முன்னிட்டு பதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.
ஜவான் படத்தில்: பதான் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் தனது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்திலும், இதற்கு அடுத்தப்படியாக நடிகை டாப்ஸியுன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு துங்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
காயம் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஷாருக்கான் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயமடைந்ததை அடுத்து,அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஷாருக்கான் மும்பை விமான நிலையம் வந்திறங்கினார்.

விலை உயர்ந்த டீ ஷர்ட்: ஷாருக்கான் விமானத்தில் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த போட்டோவில் ஷாருக்கான் ஜீன்ஸ் பேண்ட், ப்ளூ டீ ஷர்ட்டும் அணிந்து வந்திருந்தார். இந்த லுக்கில் ஷாருக்கான பார்த்த ரசிகர்கள் அந்த உடையின் விலை என்ன என்று தெரிந்து கொள்ள இணையத்தில் தேடி தலை சுற்றிப்போனார்கள். ஷாருக்கான் அணிந்து வந்த டீ ஷர்ட் ஹராட்ஸ் பிராண்ட் என்றும் அதன் விலை 1094 அமெரிக்க டாலர்கள் என்றும். இந்திய மதிப்பில் ரூ.89 ஆயிரம் என்று தெரிந்து அதிர்ந்து போனார்கள்.