Tomato theft worth Rs.1.5 lakh | ரூ.2.5 லட்சம் மதிப்பு தக்காளி திருட்டு

ஹசன்: சமீப நாட்களாக தக்காளியின் நிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120 ஐ தாண்டி உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் கோனி சோமனஹள்ளி கிராமத்தில் சோமசேகர் என்ற விவசாயியின் தோட்டத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டுள்ளது. இவர் கடந்த 3 ஆண்டுகளாக தக்காளி பயிரிட்டு வரும் நிலையில், கடந்த செவ்வாய் இரவு அவரது தோட்டத்திற்குள புகுந்த திருடர்கள் 60 மூட்டைகளில் தக்காளியை திருடி சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.