தமிழ்நாடு மின் வாரிய முறைகேடுகள்… புகார் மனுவிற்கு மாநில அரசு தரப்பு விளக்கம்!

தமிழகத்தில் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011 முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை தான் சமர்பித்துள்ளன.

இராமநாதபுரம் தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

மின்மாற்றிகள் கொள்முதல்

ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்பித்திருந்தாலும், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம் 1998 விதிஎண் 10(5)ன் படி, தமிழக மின்வாரியத்திற்கு தேவையான மின்மாற்றிகளை தகுதி வாய்ந்த அனைத்து சிறு, குறி நிறுவனங்களுக்கும் பிரித்து வழங்கி கொள்முதல் ஆணை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒரே மாதிரி விலைப்புள்ளி

மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த 2 ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. ஜெம் போர்டலில் குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு மின்மாற்றிகள் வாங்கியுள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

மின்சார விவரக் குறியீடுகள்

ஆனால் அன்றைய தேதியில் தமிழ்நாடு மின்சார வாரிய விவரக் குறியீடுகள் உடன் பெரும்பான்மையான விவரக் குறியீடுகளுடன் ஒத்து வரும் ஜெம் போர்டல் விவரக் குறியீடுகள் கொண்ட விலையை ஒப்பிட்டு தான் ஒப்பந்த புள்ளி வழங்கப்படுகிறது. இன்றைய தேதியில் ஜெம் போர்டல் விலையை எடுத்து ஒப்பீடு செய்தது சரியான நடைமுறை அல்ல.

காப்பர் மின்சுருள்

அதுமட்டுமின்றி புகாரில் மற்ற மாநிலங்கள் உடன் மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து 397.37 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக கூறியுள்ளது. காப்பர் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்யாமல் அலுமினியம் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகள் உடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தவறாக கணக்கீடு

இத்தகைய காரணங்களால் புகாரில் நிர்ணயம் செய்யப்பட்ட விலை தவறாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும் ஒரே விலைப்புள்ளியை சமர்பித்தாலும், அந்நிறுவனங்கள் உடன் ஆலோசித்து அந்நிறுவனங்கள் வழங்கிய விலைப்புள்ளியை காட்டிலும் தோராயமாக 50 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைப்பு செய்து தான் மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

முறைகேடுகள் இல்லை

திமுக அரசு எந்த நிலையிலும் முறைகேடுகள் நடைபெறுவதை அனுமதிக்காது. எனவே மின்மாற்றிகள் கொள்முதலில் எந்தவித முறைகேடுகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.