
சில்சார்: அசாமின் கச்சார் மாவட்டத்தில் மேகாலயா எல்லையை ஒட்டிய ஃபத்ரி திலா பகுதியில் மாநில போலீஸாரும் அசாம் ரைபில்ஸ் படையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரில் 400 ஜெலட்டின் குச்சிகள், 400 டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருப்பதை கண்டனர். அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், காரை ஓட்டி வந்த ப்ரசோன்ஜித் பைஷ்னாப் (24) என்பவரை கைது செய்தனர்.