புதுடில்லி: ‘அமேசான் ஆன்லைன்’ தளத்தில், 90,000 ரூபாய் மதிப்பிலான, ‘கேமரா லென்ஸ் ஆர்டர்’ செய்தவருக்கு, சீமை தினை அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘அமேசான் ஆன்லைன்’ விற்பனை சந்தை வாயிலாக பொருட்கள் வாங்குவது, கிராமங்கள் வரை வழக்கமாகி விட்டது.
நேரடியாக கடைகளில் வாங்குவதை விட, விலை மலிவாக கிடைப்பதால், கைக்குட்டை முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை, ‘ஆன்லைன்’ வாயிலாக வாங்குவதை மக்கள் விரும்புகின்றனர்.
பொருட்கள் விரைவாக கிடைப்பதுடன், குறைபாடு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளவும், திருப்பிக் கொடுக்கவும் வசதி உள்ளது. இதனால், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ முறை நம் நாட்டில் பிரபலம் அடைந்துள்ளது.
இந்த வகையில், அருண்குமார் மெஹர் என்பவர் கடந்த 5ம் தேதி, ‘அமேசான்’ தளம் வாயிலாக, 90,000 ரூபாய் மதிப்பிலான கேமரா லென்ஸ் ஆர்டர் செய்து, ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தினார்.
அடுத்த நாளே அவரது வீட்டுக்கு லென்ஸ் வந்து சேர்ந்தது. பிரித்து பார்த்தபோது, லென்ஸ் வைக்கப்பட்ட பெட்டி பிரிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. பெட்டிக்குள், லென்சுக்கு பதிலாக, சீமை தினை பாக்கெட் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அமேசான் நிறுவனத்திற்கு ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்வு அளிக்கப்படும் என, அமேசான் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
கடந்த 8ம் தேதி அமேசான் வாயிலாக, 51,000 ரூபாய் மதிப்பிலான, ‘ஆப்பிள் வாட்ச் – 8’ ஆர்டர் செய்த பெண்ணுக்கு, போலியான கைக்கடிகாரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்