வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரோம்: ஐரோப்பா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெயில் அதிகரித்து காணப்படுகின்றன. பகல் நேரத்தில் மக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வெப்பத்தை தாங்க முடியாமல், மக்கள் தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி செல்கின்றனர்.

குளிர் காலத்தில் கூட மக்கள் வெப்பம் மூட்டி குளிர் காய்ந்து சமாளித்து கொள்வார்கள்.மனிதனுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் தாங்க முடியாது. அதேபோல் வெயில் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் மக்கள் மத்தியில் அதிகம் பரவும்.

பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து, கிரீஸ், ஐரோப்பா, ஜப்பான், இத்தாலி, போன்ற தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் அனலில் சிக்கித் தவித்து வருகின்றன.
இத்தாலி முழுவதும் 16 நகரங்களில் கடும் வெப்பம் நிலவும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களான ரோம், புளோரன்ஸ் ஆகிய நகரங்களில் வெயில் 104 பாரன்ஹிட் முதல் 105 பாரன்ஹிட் வரை பதிவாகி வருகிறது. அதேபோல் ஜப்பான், வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்து காணப்படுகின்றன.

தெற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஐரோப்பாவில் வரும் நாட்களில் 110 பாரன்ஹிட் வெயில் வரை பதிவாகலாம் என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் ஸ்பெயினின் ஏற்பட்ட காட்டுத் தீயினால், வீடுகள் எரிந்து நாசமாகியதால், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இத்தாலியின் சிசிலி பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 120 டிகிரி வெப்பம் பதிவானது. இது தான் ஐரோப்பிய பிராந்தியத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகமான வெப்பநிலை.

இந்த ஆண்டில் ஐரோப்பிய வெப்பநிலை இதை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டில் வீசிய வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் மட்டும் 70 ஆயிரம் போ் பலியாகினா். அதன் பிறகு கடந்த ஆண்டு கூட வெப்ப அலை காரணமாக, 62ஆயிரம் போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
” இது போன்ற வெயிலை, வெப்பத்தையும் நான் பார்த்ததில்லை, எங்களால் தாங்க முடியல, தாகம் தணிக்கவே முடியலை” என்கிறார் இத்தாலி பெண்மணி ஒருவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement