வாஷிங்டன் : அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் தளபதியை நியமிக்கும் வகையில், அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்க கடற்படையின் தளபதியாக உள்ள அட்மிரல் மைக் கில்டே, அடுத்த மாதம், தன் நான்கு ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்கிறார்.
இதையடுத்து, தற்போது துணை தளபதியாக உள்ள லிசா பிரான்செட்டியை, படையின் புதிய தளபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, கடற்படையின் முதல் பெண் தளபதி மற்றும் முப்படைகளின் குழுவின் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார்.
படையில் உள்ள பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு உதவுவதாக, ராணுவ அமைச்சகம் அறிவித்திருந்தது.
இதற்கு, குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி., டோமி டூபர்வில்லே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனால், லிசா பிரான்செட்டி நியமனம் தொடர்பான பரிந்துரைக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.
அதே நேரத்தில், துணை தளபதி என்ற அடிப்படையில் அவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் என, கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement