செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக கைது செய்ததாக அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீத்பதி நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நடைபெற்றது. அதன் முடிவில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு சென்றது.
அவர் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் எந்த தேதி முதல் விசாரிக்கலாம் என்பதை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முடிவு செய்யும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணை
இந்நிலையில் இன்று (ஜூலை 25) பிற்பகல் 2.15 மணிக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜியை எப்போது முதல் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்த விசாரணை தொடங்கிய நிலையில் செந்தில்பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகினார். அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன். அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் போது இந்த மனுவை ஏன் நிலுவையில் வைக்க வேண்டும்? உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்று விட்டதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் நாங்கள் பிறப்பிக்கப் போவதில்லை. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கட்டும்”என்று நீதிபதி நிஷா பானு தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.