புதுடில்லி: நடப்பாண்டு ஜூனில், இந்திய பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி, முக்கிய சந்தைகளில் சரிவை கண்டுள்ளது.
உலோக பொருட்கள், தொழில்துறை இயந்திரங் கள், ஆட்டோமொபைல்கள், போக்குவரத்து உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள் போன்ற எண்ணற்ற பொருட்கள், பொறியியல் ஏற்றுமதியின் கீழ் வரும்.
நாட்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் வரிசையில், பொறியியல் ஏற்றுமதி ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா ஆகிய இந்தியாவின் முக்கிய பொறியியல் ஏற்றுமதி சந்தைகளில், நடப்பாண்டு ஜூன் மாதம், ஏற்றுமதி மிகவும் சரிந்துள்ளது.
சர்வதேச நாடுகளுக்கு இடையே நிலவும் சவாலான வர்த்தக விதிமுறைகளே, இந்த ஏற்றுமதி சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து, இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
கடந்த நிதியாண்டில், ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த மொத்த பொறியியல் பொருட்களின் அளவு, 43,624 கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இது 35,260 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில், தொடர்ந்து மூன்றாவது முறையாக, 11 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துஉள்ளது.
உலகளவிலுள்ள குறைவான தேவை காரணமாக, உலோக பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதே சமயம் ரஷ்யாவின் பொறியியல் ஏற்றுமதி, மும்மடங்கு அதிகரித்துஉள்ளது.
இவற்றின் காரணமாக, இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சரிந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்