Kaundamani: கவுண்டமணி ஹீரோவாக களமிறங்கும் முழுநீள நகைச்சுவை படம்.. டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் கவுண்டமணி தன்னுடைய நகைச்சுவையால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர். கவுண்டமணி -செந்தில் காமெடி என்ற ட்ரெண்டையே உருவாக்கியவர்.

நீண்ட காலங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்த கவுண்டமணி, தற்போது மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை துவங்கியுள்ளார்.

கவுண்டமணி நாயகனாக களமிறங்கும் முழுநீள காமெடி படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிகயுள்ளது. வித்தியாசமான தலைப்புடன் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

கவுண்டமணி நாயகனாக களமிறங்கும் நகைச்சுவை படம்: நடிகர் கவுண்டமணி கடந்த 1964ல் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். துவக்கத்தில் சிறிய கேரக்டரில் நடிக்கத்துவங்கி தன்னுடைய தனிப்பட்ட காமெடியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். 80களில் தன்னுடைய தனிப்பட்ட காமெடியிலும் செந்திலுடன் இணைந்து செய்த காமெடி கலாட்டாக்களாலும் இவரது ராஜ்ஜியம் கொடி கட்டிப்பறந்தது. கவுண்டமணி -செந்தில் காமெடி என்ற ட்ரெண்டை உருவாக்கி இன்றளவும் அதை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் செய்துள்ளார் கவுண்டமணி.

இடையில் சிறிது காலங்கள் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகியிருந்த கவுண்டமணி, தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இவர் கதாநாயகனாக நடிக்கும் முழுநீள காமெடி படம் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். சாய் ராஜகோபால் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். படத்தில் யோகிபாபு, முத்துக்காளை, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி உள்ளிட்ட காமெடி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

Comedian Kaundamani joins as a hero in new comedy movie

நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் மற்றும் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் படத்தில் நடிக்கவுள்ளனர். இவர்களுக்கு மூன்று இளம் நாயகிகளை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கவுள்ளார். சுந்தரி நீயும் சுந்தரி நானும், கிச்சா வயசு 16 ஆகிய படங்களை இயக்கிய சாய் ராஜகோபால் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம் குறித்து பேசிய ராஜகோபால், அனைத்து வயதினரையும் கவரும்வகையில் இந்தப் படம் அமையவுள்ளதாகவும் அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை படமாக ஒத்த ஓட்டு முத்தையா படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் கவுண்டமணிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் உடனடியாக நடிக்க ஓப்புதல் தந்ததாகவும் அவர் கூறினார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comedian Kaundamani joins as a hero in new comedy movie

இயக்குநர் சாய் ராஜகோபால், கவுண்டமணி மற்றும் செந்திலுக்காக 70க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ட்ராக் எழுதியுள்ளார். பல படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அர்ஜூன், டிபி கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடன் பணியாற்றியுள்ளார். 25 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றிவரும் இவர் இரு படங்களையும் இயக்கியுள்ள நிலையில், தற்போது கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் இயக்குநராக இணைந்துள்ளார். கவுண்டமணி நீண்ட வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக களமிறங்கும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.