தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துவந்த நடிகை தமன்னா இப்போது பாலிவுட் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்துகிறார். தமிழில் ஜெயிலர் படத்திலும் நடித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலிக்கிறார். அதனை இருவரும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர். தான் மிகவும் மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாக தமன்னா தெரிவித்திருந்தார். தமன்னா தனது கையில் மிகப்பெரிய வைர மோதிரம் ஒன்றை அணிந்திருக்கிறார்.

அந்த வைரம் உலகின் 5வது பெரிய வைரமாகும். மோதிரத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும். மோதிரத்தை அவரின் காதலன் வாங்கிக்கொடுக்கவில்லை. அவரும் வாங்கவில்லை. நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா தமன்னாவிற்கு இந்த அளவுக்கு விலையுயர்ந்த பரிசைக் கொடுத்துள்ளார். 2019-ம் ஆண்டே இந்தப் பரிசு தமன்னாவிற்குக் கிடைத்துவிட்டது. அதனை தமன்னா அணியும் புகைப்படம் ஒன்றை உபாசனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
`சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடிகர் ராம் சரணுடன் இணைந்து நடித்ததற்காக ராம் சரண் மனைவி உபாசனா இந்த மோதிரத்தைத் தமன்னாவிற்குப் பரிசாகக் கொடுத்தார். இப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், அனுஷ்கா ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளார். படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால் தமன்னாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தற்போது தமன்னா `லஸ்ட் ஸ்டோரீஸ் 2′ என்ற வெப்சீரிஸில் தன் காதலனுடன் இணைந்து நடித்துள்ளார்.