மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் வலுவடைந்து கடந்த ஐந்து நாட்களாக கொட்டியது. நேற்று பலத்த மழைக்கான ‘எல்லோ அலர்ட்’ விடுக்கப்பட்டு மழை தொடர்ந்தது. நேற்று காலை 8:00 மணிப்படி சராசரியாக 41.82 மி.மீ. மழை பதிவானது. தாலுகா வாரியாக தேவிகுளம் 60.6, இடுக்கி 56.4, பீர்மேடு 44, தொடுபுழா 35.7, உடும்பன்சோலை 12.4 மி.மீ. மழை பெய்தது.
சேதம்
தொடுபுழா அருகே ரோசம்மாவின் வீடு உள்பட மூன்று வீடுகள் நேற்று முன்தினம் சேதமடைந்தன. மாவட்டத்தில் நேற்று மாலை வரை மூன்று வீடுகள் முற்றிலும், 70 வீடுகள் சிறிய அளவிலும் சேதமடைந்ததாக வருவாய்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.
குறைவு:
கேரளாவில் இந்தாண்டு தென் மேற்கு பருவ மழை சற்று காலதாமதமாக ஜூன் 8ல் துவங்கி அந்த மாதம் மழை பெய்த்தது. ஜூனில் சராசரி மழையில் 73 சதவீதம் குறைந்தது. அதேபோல் ஜூன் 1 முதல் நேற்று வரை சராசரி 1353.8 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 650.5 மி.மீ. மட்டும் மழை பதிவானது. அது சராசரி அளவில் 52 சதவீதம் குறைவாகும்.
பலத்த காயம்
மூணாறில் ஜூலை 23ல் 15 செ.மீ. மழை பதிவான நிலையில் நேற்று காலை 8:00 மணிப்படி 9 செ.மீ. பெய்தது. மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான குண்டளை எஸ்டேட் புதுக்கடி டிவிஷனில் சூறாவளியில் மின்கம்பம் முறிந்து விழுந்து அதே பகுதி கோவிந்தன் 65, பலத்த காயமடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement