சென்னை இன்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது தென் மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்பட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தென் மேற்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கும். அத்துடன் வெப்பசலனம், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாகவும் மழை பெய்யும். வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக்கடல் […]
