பெங்களூரு டூ ஓசூர் புறநகர் ரயில்… கூடவே 5 சூப்பர் சிட்டீஸ்… 452 கி.மீ தூரத்திற்கு K-Ride போட்ட மெகா பிளான்!

கர்நாடகா மாநிலத்தில் ரயில் போக்குவரத்து சேவையை K-Ride என்ற நிறுவனம் கையாண்டு வருகிறது. இது கர்நாடகா அரசு (51 சதவீத பங்குகள்) மற்றும் ரயில்வே அமைச்சகம் (49 சதவீத பங்குகள்) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஆங்கிலப் பெயரான Rail Infrastructure Development Company (Karnataka) Limited என்பதன் சுருக்கம் K-Ride ஆகும்.

​பெங்களூரு புறநகர் ரயில்இந்த நிறுவனம் தலைநகர் பெங்களூவின் புறநகர் ரயில் திட்டத்தை படிப்படியாக நீட்டிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மொத்தம் 452 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் சேவையை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரு உடன் கோலார், துமகுரு, மைசூரு, பங்கார்பேட், ஓசூர், கவுரிபிடனூர் ஆகிய 6 நகரங்கள் இணைக்கப்படுகின்றன.ரயில்வே அமைச்சகம் புதிய திட்டம்இந்த திட்டம் தொடர்பாக கர்நாடகா மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலை ரயில்வே அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளது. இருதரப்பும் ஒருமித்த முடிவை எட்டியதை அடுத்து அடுத்தகட்ட நகர்வில் இறங்கியுள்ளனர். தற்போது பெங்களூரு புறநகர் ரயில் சேவையை நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயத் தொடங்கியுள்ளனர்.​தமிழகத்துடன் இணைப்புஇதில் பெங்களூரு நகரை தமிழகத்துடன் இணைக்கும் சூப்பர் திட்டமும் அடங்கும். பெங்களூருவிற்கு அருகில் இருக்கும் தொழில் நகரமாக ஓசூர் காணப்படுகிறது. இங்கு உள்நாட்டு நிறுவனங்கள் முதல் சர்வதேச நிறுவனங்கள் வரை பலவும் முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. ஐடி நிறுவனங்கள் மட்டும் தான் குறையாக பார்க்கப்படுகிறது. அதுவும் வந்துவிட்டால் பெங்களூருவிற்கே டஃப் கொடுக்க ஆரம்பித்துவிடும்.வேற லெவலுக்கு மாறும் ஓசூர்இந்த சூழலில் பெங்களூரு புறநகர் ரயில் சேவை ஓசூர் வரை நீட்டிப்பது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையை ஓசூர் வரை நீட்டிக்கும் திட்டமும் ஆலோசனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.4 வெவ்வேறு வழித்தடங்கள்இந்நிலையில் K-Ride நிறுவனம் முதல்கட்டமாக 148 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வெவ்வேறு வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதில், கே.எஸ்.ஆர் பெங்களூரு சிடி டூ தேவனஹள்ளி, பையப்பனஹள்ளி டூ சிக்கபனவரா, கெங்கேரி டூ ஒயிட்ஃபீல்டு, ஹீலாலிகே டூ ராஜானுகுண்டே ஆகியவை அடங்கும்.கோலார், மைசூரு, துமகுரு நகரங்கள் இணைப்புஇதையடுத்து தேவனஹள்ளி டூ கோலார் வரையிலான 107 கி.மீ தூர சேவை, துமகுரு டூ சிக்கபனவரா வரையிலான 55 கி.மீ தூர சேவை, கெங்கேரி டூ மைசூரு வரையிலான 125 கி.மீ தூர சேவை, பங்கார்பேட் டூ ஒயிட்ஃபீல்டு வரையிலான 45 கி.மீ தூர சேவை, ஹீலாலிகே டூ ஓசூர் வரையிலான 23 கி.மீ தூர சேவை, ராஜானுகுண்டே டூ கவுரிபிடனூர் வரையிலான 52 கி.மீ தூர சேவை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.