பிரபல கிரிக்கெட் வீரர் M.S. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் , இவானா , நதியா , RJ விஜய் ஆகியோர் நடித்து வெளிவர இருக்கும் படம் LGM. இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இந்த படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. தோனி பேட்டிங்கை ரசிக்கும் பரிமாணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தயாரிப்பாளராக புது உருவம் எடுத்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார் சாக்ஷி தோனி

நிகழ்ச்சியில் பேசிய RJ விஜய்,
“தல தோனி போல சாக்ஷி மேமும் ரொம்ப கூல் தான். அவங்களுக்கு ரொம்ப நன்றி எங்க டீமை நம்பி படம் பண்ணிருக்காங்க. படம் ஷூட்டிங் அப்போ ஒவ்வொரு நாளும் தலைய எப்போடா பாப்போம் என்று ஆவலாக இருக்கும். போஸ்ட் புரொடக்ஷன் போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .திடீர்னு கடவுள நேர்ல பாத்தா மாறி அமைதியாகிட்டேன். பிறகு , ‘ஹலோ விஜய்’ னு அவரே வந்து பேசி என்னைப் பாராட்டினார். “அய்யோ தலைவா” என இருந்தது.

“தோனி என்டர்டெயின்மென்ட் தான் இந்த படத்திற்கு பெரிய விளம்பரம். குடும்பத்தோடு போனா படத்த பார்த்து நல்லா சிரிச்சிட்டு வெளில வருவீங்க ” என்று சொல்லி படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் நதியா .
ஹரிஷ் கல்யாண் ,
” பெரிய படங்கள் மட்டுமின்றி, அயோத்தி, குட் நைட், தாதா போன்ற படங்களையும் தமிழ் ரசிகர்கள் ஆதரித்துள்ளனர். இந்த வகையான ஆதரவு சினிமா துறைக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே வழியில், நாங்கள் உங்களுக்கு LGM படத்தை கொண்டு வருகிறோம். எம்.எஸ்.டி.யின் கீழ் படத்தில் நடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்றார்
” இந்த பிரஸ் மீட் எல்லாம் எனக்கு ரொம்பப் புதுசு ” என்று தயக்கத்துடன் பேச தொடங்கினார் சாக்ஷி .
“தோனிக்கும் தமிழ் மக்களுக்கும் மொழி ஒரு தடை இல்லை. அவர் தமிழ் மக்களோடு உணர்வுபூர்வமாக இணைந்து இருக்கிறார். எனவே தமிழில் முதல் படம் தயாரித்து இருக்கிறோம். மாமியாருக்கும் மருமகளுக்கும் காலகாலமாக இருக்கும் சில சிக்கல்களை பற்றி ரொம்ப நகைச்சுவையா பேசும் படம் தான் LGM. தோனிக்கும் படம் பிடித்தது .”
‘தோனியை ஹீரோவாக வைத்து படம் பண்ணுவீங்களா?’ என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அது நேரம் வரும்போது அவர் முடிவு செய்வார். ஆனால் தோனியை வைத்து படம் பண்ணினால் நிச்சயம் அது ஒரு ஆக்சன் படமாக இருக்கும்.” என்றார் சாக்ஷி

இறுதியாக பேசிய இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி ,
” LGM படத்தின் ஒன்லைன் சாக்ஷி மேம் சொல்லியது. அதனை மெழுகேத்தி முழு நீளத் திரைப்படமாக நான் எடுத்து இருக்கிறேன். தல தோனியை மையமாக வைத்து நான் உருவாக்கிய ‘அதர்வா ‘ கிராபிக் நாவல் அவருக்கு ரொம்ப பிடித்தது . இப்போது படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். கூடுதல் பொறுப்புணர்ச்சி எனக்கு இருந்தது . நடிகர் நடிகையின் தேர்வின்போது , ‘ஹிந்தி நடிகை வேண்டாம் . தமிழ் நடிகை தான் சரியாக இருக்கும் ‘ என்று உறுதியாக இருந்தார் சாக்ஷி மேம் . நல்ல பேமிலி எண்டர்டெயினராக இந்த படம் இருக்கும் .” என்றார் .