பெஷாவர், சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதை அடுத்து, 18 வயது காதலனைத் தேடி, 21 வயது சீனப் பெண் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
சமூக வலைதளங்களின் வருகையால், சமீபகாலமாக, எல்லைத் தாண்டிய காதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த வரிசையில், ‘ஸ்னாப்ஷாட்’ எனப்படும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்த சீனாவைச் சேர்ந்த காவ்பெங், 21, என்ற இளம்பெண்ணுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்த ஜாவேத், 19, என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
மூன்று ஆண்டுகள் தொடர்ந்த உறவு பின் காதலாக மாறியது.
இதையடுத்து, மூன்று மாத விசாவில், சீனாவில் இருந்து கில்கிட் வழியாக சாலை மார்க்கமாக நேற்று முன்தினம் பாக்., சென்ற காவ்கெங்கை, ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து அவரின் காதலரான ஜாவேத் அழைத்துச் சென்றார்.
தன் சொந்த ஊர் இருக்கும் பஜவுர் பழங்குடியின மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு இல்லாததால், ஜாவேத் தன் காதலியை லோயர் டிர் மாவட்டத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்க வைத்து உள்ளார்.
உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தான் வந்துள்ள காவ்பெங்கை, அங்கு தங்க அனுமதித்த போலீசார், பாதுகாப்பு கருதி வெளியில் நடமாட தடை
விதித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement