பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவில், நுகர்வோர் சந்தை மற்றும் ஏற்றுமதி வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஆணுறை விற்பனை உச்சம் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த, பிரபல நுகர்வோர் விற்பனை முன்னணி நிறுவனமான, யுனிலீவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,‛ கொரோனா தொற்று பாதிப்புக்கு பின், சீனாவில் வர்த்தக அடையாள அளவீடு வரலாறு காணாத அளவில், மிகவும் குறைந்துள்ளது.
நுகர்வோர் சந்தை வீழ்ச்சியடைந்திருந்தாலும், ஆணுறைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. நுகர்வோரின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும், அந்நாட்டு அரசு, கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’ எனக்கூறப்பட்டிருந்தது.
இது குறித்து, ஆணுறை தயாரிப்பில் ஈடுபட்டு வரும், சீனாவைச் சேர்ந்த ரெகிட் நிறுவன, தலைமை செயல் அதிகாரி, நிக்காண்ட்ரோ துரந்த் கூறியுள்ளதாவது:
நாட்டில், இரவு வாழ்க்கையை மக்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர்.
இதனால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில், மந்த நிலை காணப்பட்டாலும், நாட்டில் தம்பதிகளுக்கிடையே நெருக்கத்தை அதிகரிக்கும் விதமான, தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
![]() |
இதற்காக, ஆணுறைகளில் புதிய விஷயங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதனால், கொரோனா தொற்றுக்கு பின், எங்கள் நிறுவனத்தின் மொத்த வருவாய் வளர்ச்சி, 8.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நாட்டிலேயே இதுவரை இல்லாத வகையில், மிக மென்மையான ஆணுறைகளை தயாரிப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
இவை, 2026ம் ஆண்டு ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்