Maaveeran: சிங்கிள் ஷாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்… ட்ரெண்டாகும் மாவீரன் Uncut வெர்ஷன்!

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கிடைத்தது.

இதனால், மாவீரன் 75 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மாவீரன் படத்திற்கு ஹைப் கொடுக்கும் விதமாக ‘சீன் ஆ சீன் ஆ’ பாடலின் அன்கட் வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெண்டாகும் மாவீரன் Uncut வெர்ஷன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாவீரன் திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கம் போல இந்தப் படத்திலும் ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்துவிட்டார் என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லன்களாக சுனில், இயக்குநர் மிஷ்கின் இருவரும் மிரட்டியிருந்தனர். அதேபோல், சிவகார்த்திகேயன் – யோகி பாபு காம்போ காமெடியில் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தது. இன்னொரு பக்கம் திரையில் முகம் காட்டாமல் வாய்ஸ் ஓவர் கொடுத்தே மாவீரனில் மாஸ் காட்டினார் விஜய் சேதுபதி. முக்கியமாக இந்தப் படத்துக்காக விஜய் சேதுபதி சம்பளமே வாங்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 Maaveeran: Maaveeran Scene Ah Scene Ah song single shot sequences video released

மாவீரன் திரைப்படம் இதுவரை 75 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே வாரத்திற்குள் 50 கோடி வசூலை கடந்தத மாவீரன், இப்போது வரையிலும் தொடர்ந்து வசூலில் அதகளம் செய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நாளை தமிழில் 5க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. இதனால், ரசிகர்களை விட்டுவிடக் கூடாது என்பதற்காக மாவீரன் படக்குழு தற்போது ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.

அதாவது மாவீரன் படத்தில் இடம்பெற்ற ‘சீன் ஆ சீன் ஆ’ பாடலின் அப்டேட் வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்பாடலில் சிவகார்த்திகேயன் சிங்கிள் ஷாட்டில் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். பாடலின் முதல் பிஜிஎம் வரும் 2.10 முதல் 3.10 நிமிடங்கள் வரை ஒருநிமிடம் சிங்கிள் ஷாட்டில் டான்ஸ் ஆடியுள்ளார். அதேபோல், பாடலின் இறுதியிலும் இதேபோல் ஒரு நிமிடம் சிங்கிள் ஷாட்டில் நடனமாடியுள்ளது ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் விஜய் சிங்கிள் ஷாட்டில் டான்ஸ் ஆடியிருந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற ஹீரோக்களும் இதுபோன்ற சிங்கிள் ஷாட் போதையில் அவர்களது படங்களில் நடனமாடி வருகின்றனர். அந்த வரிசையில் தான் சிவகார்த்திகேயனும் மாவீரன் ‘சீன் ஆ சீன் ஆ’ பாடலில் சிங்கிள் ஷாட்டில் ஆடியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.