திருவனந்தபுரம்:கேரளாவில் வணிக வளாகங்களில் ஷேவிங் செட்டுகளை மட்டும் குறி வைத்து திருடிய மும்பையைச்சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சி , கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் பெரிய வணிக வளாகங்களில் விலை உயர்ந்த ஷேவிங் செட்டுகள் திருட்டு போவது அதிகரித்து வந்தது.
கொச்சி அருகே மரடு பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஷேவிங் செட்டுகள் திருட்டு போயின.
இது தொடர்பாக பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடர்களை பிடிக்க கொச்சி துணை போலீஸ் கமிஷனர் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் வணிக வளாகம் அமைந்துள்ள ரோடுகளில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்,
இதில் மூன்று பேர் வணிக வளாகங்களுக்கு சென்று திரும்பும் காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மும்பை கல்யாண் உல்லாச நகரைச் சேர்ந்த மணிஷ் மக்யாஜன் 23, மெகபூப் முகமது ஷேக் 24, அயான் மைதீன் 26, என்பது தெரியவந்தது.
கேரளா வரும் இவர்கள் ஒவ்வொரு முறையும் பெரிய வணிக வளாகங்களில் இருந்து மூன்று முதல் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான ஷேவிங் செட்டுகளை திருடி விட்டு மும்பை சென்று அவற்றை விற்பது தெரியவந்தது. மூன்று பேரும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement