சென்னை: அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி திரைப்படத்தின் ஒரு வாரத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வசந்தபாலன் பாலன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் எம்.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன் ஆகியோர் தயாரித்து உள்ள படம் அநீதி.
இப்படத்தில் அர்ஜூன் தாஸ்,துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம், பரணி, சாரா, அறந்தாங்கி நிஷா, சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நடிகர் அர்ஜூன் தாஸ்: கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் தனது வித்தியாசமான குரலால் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ், இப்படத்தைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் போன்ற படத்தில் வில்லனாக படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அர்ஜுன் தாஸ் அநீதி படத்தின் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.
அநீதி: அதிரடி ஆக்ஷன் க்ரைம் தில்லர் பாணியில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் திருமேனி என்ற கதாபாத்திரத்திலும், துஷாரா விஜயன் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் அர்ஜூன் தாஸ், யாரைப் பார்த்தாலும் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு மனநோய்யால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
படத்தின் கதை: இந்த நேரத்தில், தொழிலதிபரின் வீட்டில் வேலை செய்யும் சுப்புலட்சுமியின் மீது காதல் வயப்படுகிறார். இந்த நேரத்தில் சுப்புலட்சுமி வேலை செய்யும் வீட்டின் முதலாளி அம்மா இறந்துவிட கொலைப்பழி இவர்கள் மீது விழுகிறது. இதில் இருந்து இருவரும் எப்படி மீண்டார்கள் என்பது தான் அநீதி படத்தின் மொத்தக்கதை.
ஒரு வாரத்தின் வசூல்: இத்திரைப்படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியான நிலையில், இப்படம் முதல் நாளில் 80 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின் இரண்டு மற்றும் மூன்றாம் நாட்களில் 40 முதல் 50 லட்சத்தை வசூலித்துள்ளது.இத்திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகி உள்ள நிலையில் படம் 1.50 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.