புதுடில்லி:தலைநகர் டில்லியில், தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா நுால் ஆன்லைனில் விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, புதுடில்லி மாநகர போலீஸ் குற்றப்பிரிவு சிறப்பு கமிஷனர் ரவீந்திர சிங் யாதவ் கூறியதாவது:
பட்டம் விடுவதற்கு மாஞ்சா நுால் பயன்படுத்த டில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் மாஞ்சா தயாரித்து விற்கின்றனர். சீன நாட்டில் நைலான் நூல் கொண்டு தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூலை, ஆன்லைனில் விற்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
போலீசார் வைத்த பொறியில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரித்திக் குமார் சவுராசியா,24 என்பவர் சிக்கினார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஹரியானாவின் பரிதாபாத் நகரைச் சேர்ந்த அலி ஹசன்,36, ஹர்ஷ்வர்தன் காத்ரி,28 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மூவரிடம் இருந்தும் 201 சீன நாட்டு மாஞ்சா நுால் கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இம்மூவரும் சமூக ஊடகங்களில், ‘மோனோ கைட்’ என்ற பக்கத்தை உருவாக்கியுள்ளனர். அதன் வாயிலாக சீன நாட்டு மாஞ்சா நுால் விற்பனை செய்துள்ளனர்.
பரிதாபாத், குருகிராம், புதுடில்லி உள்ளிட்ட தேசிய தலைநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நுால் விற்பனை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement