சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர்.
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் ரிலீஸ் டிசம்பர் 15ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.
ஒரேநாளில் 23.1 மில்லியன் வியூஸ்களை பெற்ற கேப்டன் மில்லர் டீசர்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜான் கொக்கன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த மாத இறுதியில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. கையில் துப்பாக்கியுடன், வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் இந்த போஸ்டரில் மிரட்டியிருந்தார்.
இதனிடையே இந்தப் படத்தின் டீசர் நேற்றைய தினம் அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12.01 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ராக்கி, சாணிக்காயிதம் என வித்தியாசமான கதைக்களங்களை கையில் எடுத்து ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்த அருண் மாதேஸ்வரன், இந்தப் படத்தில் பீரியட் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார்.
இந்தப் படத்திற்காக மற்ற படங்களில் இல்லாத வகையில் சிறப்பாக 10 மாதங்கள் தனுஷ் கால்ஷீட் கொடுத்திருந்த நிலையில், படத்தின் காட்சிகளை ஐந்தரை மணிநேரத்திற்கு அருண் மாதேஸ்வரன் எடுத்துள்ளதாகவும் அடுத்த பாகத்திற்கான காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவற்றிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படமும் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து படம் அடுத்தடுத்த பாகங்களில் வெளியாகவுள்ளதாகவும் முன்னதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் டீசரில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்களை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். படத்தை பார்ப்பதற்காக வரும் டிசம்பர் 15ம் தேதி வரை காத்திருக்க ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் தயாராக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்தப் படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியான நிலையில், ஒரே நாளில் டீசர் 23.1 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்த சாதனையை புரிந்த முதல் படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மாஸ்டர் படம் 20 மில்லியன் வியூஸ்களையும் சர்க்கார் 14.9 மில்லியன் வியூஸ்களையும் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் மற்றும் மிரட்டும் வகையில் கேப்டன் மில்லர் டீசர் அமைந்துள்ளது.