போபால்: ம.பி.,யில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த நபர்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
ம.பி.,யின் சட்னா மாவட்டத்தின் மைஹர் பகுதியைச் சேர்ந்த ரவிந்திர குமார் மற்றும் அதுல் பதோலியா என்பவர்கள் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததுடன், கடித்து துன்புறுத்தி உள்ளனர்.
பிறகு பிறப்புறுப்பில் கடினமான பொருட்களை திணித்துள்ளனர் இதில், படுகாயம் அடைந்துள்ள சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், கைது செய்யப்பட்டவர்களின் வீட்டை ஆய்வு செய்தனர். அதில் வீடுகள், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அதனை இடிக்க முடிவு செய்தனர். ஆனால், குற்றவாளிகளின் குடும்பத்தினர், கண்ணீர் விட்டு அழுதபடி கெஞ்சினர். விசாரணை முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என வலியுறுத்தினர். ஆனால், அதனை கண்டு கொள்ளாத அதிகாரிகள் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement