Super Star: ”ஒரே சூப்பர் ஸ்டார் காலம் முடிந்துவிட்டது”… ரஜினிக்கு ஷாக் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ரஜினி, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், கலாநிதி மாறன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது வைரலானது.

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரே சூப்பர் ஸ்டார் காலமெல்லாம் முடிந்து விட்டதாக தயாரிப்பாளர் SR பிரபு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே சூப்பர் ஸ்டார் காலம் முடிந்துவிட்டது: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தமன்னா, இயக்குநர் நெல்சன், அனிருத், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் ஜெயிலர் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து மிக வெளிப்படையாக பேசியிருந்தார் ரஜினி. சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு தான் ஒருபோதும் ஆசைபட்டது இல்லையென்றும், பலவருடங்களுக்கு முன்பே இது வேண்டாம் என சொன்னதாகவும் கூறினார். அதேபோல், காகம் – பருந்து என விஜய் ஸ்டைலில் குட்டி ஸ்டோரியும் கூறி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார்.

 Super Star: Producer SR Prabhu criticized Rajini for Super Star Title

சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், ரஜினியின் பேச்சை ரசிகர்கள் வைரலாக்கினர், அதேபோல் சூப்பர் ஸ்டார் டைட்டிலை வைத்து அவரை ட்ரோல் செய்தும் வந்தனர். முக்கியமாக ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து தனது டிவிட்டரில் ரஜினிக்கு எதிராக போஸ்ட் போட்டுக்கொண்டே வந்தார். இந்நிலையில், இப்போது தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவும் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, “திரைப்பட வர்த்தகத்தில் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற காலம் முடிந்துவிட்டது. படத்தின் ரிலீஸ் தேதி, கதை, திரைக்கதை, படக்குழு, போட்டி படங்களின் ரிலீஸ் உட்பட அம்சங்கள் தான் அனைத்து நட்சத்திர ஹீரோக்களின் சந்தை மதிப்பை தீர்மானிக்கிறது. தற்போது சினிமா வியாபாரம் எல்லைகளை கடந்து விரிந்துவிட்டது. அதற்கான சிறந்த உதாரணம் தெலுங்கு திரையுலகம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 Super Star: Producer SR Prabhu criticized Rajini for Super Star Title

இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், “நான் சொன்னப்ப பருந்து குஞ்சுங்க என்ன சவுண்ட் விட்டீங்க. இந்தா வாங்கிக்கங்க. பெசல் ஐட்டம்” என ரஜினி ரசிகர்களை வம்பிழுத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலம் படங்களை தயாரித்து வரும் எஸ்.ஆர் பிரபு முன்னணி நடிகரான ரஜினியை சூப்பர் ஸ்டார் டைட்டில் வைத்து கார்னர் செய்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.