ஓணம் சிறப்பு ரயில்கள் ரெடி… சென்னை டூ கேரளா போகலாம்… தெற்கு ரயில்வே பலே ஏற்பாடு!

ஓணம் பண்டிகை என்றாலே கேரளா தான். மகாபலி மன்னனின் வரலாறும், பண்டிகைக்காக செய்யப்படும் சிறப்பு ஏற்பாடுகளும், கேரளா மண்ணை சேர்ந்த அழகிய மக்களும், பல்சுவை பதார்த்தங்களும் என நினைக்கும் போதே தித்திக்கும். ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல. 10 நாட்கள் ஓணம் ஸ்பெஷல் களைகட்டும்.

ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை… 12 நாட்கள் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கம்!

ஓணம் பண்டிகை ஸ்பெஷல்

தமிழகத்திலும் ஏராளமான கேரளா மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நமது மண்ணில் கொண்டாடி தீர்க்கும் அழகே தனி. இந்நிலையில் ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

சென்னை டூ எர்ணாகுளம்

ரயில் எண் 06046 கொண்ட எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய நாட்களில் இயக்கப்படும். இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06045 கொண்ட சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் ஆகஸ்ட் 25, செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். பிற்பகல் 3.10 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்.

தாம்பரம் டூ மங்களூரு

ரயில் எண் 06041 கொண்ட தாம்பரம் – மங்களூரு ஜங்ஷன் இடையிலான சிறப்பு ரயில் ஆகஸ்ட் 22, 29, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். பிற்பகல் 1.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06042 கொண்ட மங்களூரு ஜங்ஷன் – தாம்பரம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மங்களூருவில் காலை 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இதேபோல் வேளாங்கண்ணி மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி மேலும் சில சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேளாங்கண்ணி டூ எர்ணாகுளம்

ரயில் எண் 06039/ 06040 கொண்ட எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இது ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4, 11 ஆகிய நாட்களில் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வந்தடையும்.

மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12 ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்தில் மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்றடையும்.

வேளாங்கண்ணி டூ திருவனந்தபுரம்

ரயில் எண் 06020/ 06019 கொண்ட திருவனந்தபுரம் சென்ட்ரல் – வேளாங்கண்ணி – திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். திருவனந்தபுரத்தில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணியில் 4 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி – திருவனந்தபுரம் சென்ட்ரல் சிற்பபு ரயில் ஆகஸ்ட் 24,31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். வேளாங்கண்ணியில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்தில் மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்றடையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.