பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே தனியார் கல்லூரியில் மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி சகுந்தலா (32) கர்நாடக முதல்வர் சித்தராமையாவையும் அவரது குடும்பத்தினரையும் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார். இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ரமேஷ் பெங்களூரு ஐகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த போலீஸார் சகுந்தலா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர்.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஆர்.அசோகா, ‘‘காங்கிரஸ் ஆட்சியில் கருத்துரிமை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது’’ என்று கண்டனம் தெரிவித்தார்.