வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹெராத்,-ஆப்கானிஸ்தானில், பறிமுதல் செய்யப்பட்ட இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்களை, தலிபான் அமைப்பினர் தீயிட்டு எரித்தனர்.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, 2021 ஆகஸ்டில் ஆட்சி அதிகாரத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றினர்.
இதையடுத்து, பெண்கள் தனியாக வெளியே செல்லவும், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லவும், அழகு நிலையங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் இசை மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து கிட்டார், தபலா, ஒலிபெருக்கிகள் உள்ளிட்டவற்றை தலிபான் அமைப்பினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று ஹெராத் மாகாணத்தில், பறிமுதல் செய்யப்பட்ட இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்களை தலிபான்கள் தீயிட்டு எரித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement