சந்தானம் கம்பேக் கொடுத்துள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் மூன்று நாள் வசூல் இவ்வளவா.?: அடேங்கப்பா..!

தமிழ் சினிமாவில் காமெடி ரோல்களில் நடித்து அதகளம் செய்தவர் சந்தானம். இவர் ஹீரோவாக மாறிய பின் காமெடியனாக நடிப்பதை கைவிட்டார். இதனால் அவரது டைமிங் காமெடிகளை மிஸ் செய்வதாக ரசிகர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் சந்தானம்.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்தார். மேலும் மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முனிஸ்காந்த்,பிரதீப் ராவத், மாசூம் சங்கர், மாறன், டைகர் தங்கத்துரை, பெப்சி விஜயன் உள்ளிட்ட

ஏராளமான நகைச்சுவை பட்டாளங்கள் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அண்மையில் வெளியான இந்தப்படத்தில் தனது காதலிக்காக பணத்தை ரெடி பண்ண பேய் பங்களாவில் நுழைகிறார் சந்தானம். அங்கிருந்து பணத்தை மீட்பதற்காக சந்தானம் மற்றும் அவருடைய படைகள் செய்யும் லூட்டிகள் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை. இந்தப்படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காமெடி சரவடி தான் என்றும், பழைய சந்தானம் இஸ் பேக் என்றும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறி வந்தனர்.

மேலும், இந்தப்படம் சந்தானம் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ படங்களின் முதல், இரண்டாம் பாகங்களின் தொடர்ச்சியாக மூன்றாம் பாகமாக வெளியானது. முதல் இரண்டு பாகங்களை ராம்பாலா என்பவர் இயக்கியிருந்த நிலையில் தற்போது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தை பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

ரூ.500 கோடி பட்ஜெட்டாக இருந்தாலும் நடிக்க மாட்டேன்: மாளவிகா மோகனன் திடீர் முடிவு.!

இந்தப்படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் வசூல் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி மூன்று நாட்களில் இந்தப்படம் ரூபாய் 13 கோடி வரை வசூலித்துள்ளதாகவும், அதிக திரைகளில் படம் திரையிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தானம் செம்ம குஷியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பெரியளவில் வரவேற்பை பெறாத நிலையில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் அவருக்கு தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது. ரசிகர்களும் அவரை தொடர்ச்சியாக இம்மாதிரியான படங்களில் நடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் வரும் நாட்களில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சும்மா தெறிக்கும்.. ‘தளபதி 68’ குறித்து வெங்கட் பிரபு சொன்ன வார்த்தை: சம்பவம் தான் போல.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.