மும்பை: பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் அவரின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி ஜூலை 31ந் தேதி 1991ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார்.
இவருடைய உண்மையான பெயர் ஆலியா. சல்மான் கான் தான் இவருக்கு கியாரா அத்வானி என்று பெயர் வைத்தார்.
கியாரா அத்வானி: 2014ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஃபக்லி படம் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி. அதன் பின்னர் 2016ல் வெளியான எம்.எஸ். தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் மனைவியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் இவருக்கு நட்சத்திர அந்தஸ்த்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின் தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக பரத் எனும் நான் படத்தில் நடித்திருந்தார்.
லஸ்ட் ஸ்டோரீஸ்: இந்தி, தெலுங்கு திரையுலகில் பிசியாக நடித்து வந்த கியாரா, நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த தொடரில் இவர் வைப்ரேட்டர் பயன்படுத்தும் சீன் இன்றளவும் இணையத்தில் செம டிரெண்டிங்கில் உள்ளது.

காதல் திருமணம்: இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஷெர்ஷா படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கி, பல இடங்களில் சுற்றி திரிந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு: தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியான நடிகையாக இருக்கும் கியாரா அத்வானியின் முழு சொத்து மதிப்பு ரூ. 32 கோடி இருக்கும் என்றும், அவர் ஒரு படத்திற்கு ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், கபீர் சிங் படத்தில் நடித்ததற்காக 3 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். பிராண்ட்ஸ் ஸ்டார்ம் இந்தியா மற்றும் லிம்கா உள்ளிட்ட ஆறு விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளமாக பெற்றுள்ளார். Mercedes Benz E220D கார் வைத்திருக்கிறார். இவருக்கு சொந்தமாக மும்பையில் 60 லட்சத்தில் பெரிய பங்களா ஒன்றும் உள்ளது. அந்த வீட்டில் தற்போது இவரது பெற்றோர் வசித்து வருகின்றனர்.