வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெய்ஜீங்: சீனாவில் பெய்த பேய் மழையில் சிக்கி 11 பேர் பலியாகினர். 27 பேர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். இவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பெய்ஜீங்கை ஒட்டியுள்ள மலை பகுதிகளில் இந்த மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகினர் மக்கள். பல கார்கள் சேறுக்குள் சிக்கியது.
4 நாட்களாக பெய்து வரும் மழையால் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் மாற்று இடம் நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெய்ஜீங்கில் எப்போதும் வறண்ட நிலையை அதிகம் பார்த்த மக்கள் தொடர் மழையால் கவலை அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement