கப்பலில் இருந்து கடலில் குதித்த இந்திய பெண் உயிரிழப்பு.!

இந்தியாவைச் சேர்ந்த ரீத்தா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜனியுடன் ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்’ பயணக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், சிக்கப்பூர் செல்லும் வழியில் இந்த கப்பலில் இருந்து ரீத்தா சஹானி குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரீத்தா சஹானியின் மகன் கூறுகையில், “கப்பலில் இருந்து தனது தாய் குதித்துவிட்டதாக கூறினர். முன்னதாக, இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டது. ஆனால், அது அவர்தான் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. எனது தந்தையையும் கப்பலில் இருந்து இறக்கிவிட்டனர்.

இந்நிலையில், இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து, அது தனது தாய் தான் என்றும் அவர் இறந்துவிட்டார் என்றும் தெரியவந்தது. அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தனக்கு உதவிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் அலுவலகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். மேலும், கப்பிலில் இருந்து இந்தியப் பெண் விழுந்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.