தெற்கில் திரும்பிய தமிழக அரசியல்… அலர்ட் அதிமுக, பலே பாஜக, திருப்புமுனை திமுக!

தமிழகத்தில் அரசியல் ரீதியாக நான்காக பிரிக்கலாம். வடக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு தமிழகம். இதில் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுகவிற்கு ஆதரவு அலை நீடிக்கிறது. குறிப்பிடத்தக்க அளவிற்கு

வாக்கு வங்கியும் உண்டு. மேற்கில் அதிமுகவின் கொடி தான். தெற்கை பொறுத்தவரை

, அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் சமமான போட்டி நிலவுவதை பார்க்கலாம்.

மதுரை மாநாட்டின் கூட்டத்தை தடுக்கவே முடியாது – எம்.ஆர்.விஜயபாஸ்கர் !

தென் தமிழக அரசியல்

அதேசமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜகவிற்கு ஆதரவு அலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில் 2024 மக்களவை தேர்தல் பகுதி வாரியான அரசியலை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் பல்வேறு திட்டங்களை முடுக்கி விட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதுரை மற்றும் திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

நேரில் வந்த அமித் ஷா

இதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை 28ஆம் தேதி ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கினார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மாஸ்டர் மைண்ட்டுமான அமித் ஷா நேரில் வந்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். தற்போது ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

மதுரையில் அதிமுக மாநாடு

அப்படியே பாஜகவின் எழுச்சிக்கு மத்திய அரசின் நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து வருகின்றனர். அடுத்த சில வாரங்கள் தென் தமிழகத்தை பாஜக பரபரப்பாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் வரும் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர்

தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

எம்.ஜி.ஆரும், மதுரையும்

குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாநாட்டை சிறப்பான முறையில் நடத்தி கொடுக்க அறிவுறுத்தி வருகின்றனர். மதுரை என்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு சென்டிமென்ட்டான இடம். எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டதும், எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்க தொடக்கப் புள்ளியாக இருந்ததும் மதுரை என்பதை மறந்துவிட முடியாது.

மீனவர்கள் மாநாட்டில் ஸ்டாலின்

ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை ஒதுக்கி வைத்து விட்டு தெற்கில் அரசியல் செய்வது எடப்பாடிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதை மாற்றிக் காட்டும் வகையில் தனது செல்வாக்கை வலுப்படுத்த எடப்பாடி திட்டமிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி ஆளுங்கட்சியான திமுகவும் தெற்கே திரும்பியுள்ளது.

வரும் 19ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மீனவர்கள் நலன் சார்ந்த விஷயங்கள் ஒருபுறமும், கட்சி ரீதியிலான சில வியூகங்கள் மறுபுறமும் என காய் நகர்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. விரைவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் இருக்கலாம் என்று பேசப்படும் நிலையில், தெற்கில் திருப்புமுனை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கலாம் எனத் தெரிகிறது.

ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்

நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டனர். இதன்மூலம் அரசியல் களத்தில் தங்களின் இருப்பையும் நினைவு கூர்ந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.