தொங்கியபடி கிடந்த சார்ஜர் வயர்.. வாயில் வைத்த 8 மாதக் குழந்தை பரிதாப பலி.. அய்யோ

பெங்களூர்:
ப்ளக்கில் சொருகி கிடந்த சார்ஜர் வயரை விளையாட்டாக வாயில் வைத்த 8 மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்கள் வீடுகளில் சார்ஜர் வயர்களை தொங்கவிட்டபடி அலட்சியமாக இருக்கும் நிலையில், இந்த பிஞ்சுக் குழந்தையின் பரிதாப மரணம் ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சித்தரதா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் கல்குத்கர். இவருக்கு சஞ்சனா என்ற மனைவியும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில், வழக்கம் போல சந்தோஷ் இன்று காலை வேலைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது தனது செல்போனை சார்ஜரில் போட்டிருக்கிறார். பின்னர் குளித்து முடித்துவிட்டு வந்த அவர், செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்துள்ளார். ஆனால் சுவிட்சை ஆப் செய்யவில்லை. இதில் சார்ஜரின் வயர் கீழே தொங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அவர்களின் 8 மாதக் குழந்தை அங்கு தவழ்ந்து வந்துள்ளது. சார்ஜர் வயர் தொங்கியபடி அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்ததால், குழந்தை அந்த வயரை எடுத்து அதில் உள்ள பின்-ஐ வாயில் வைத்து கடித்துள்ளது. அவ்வளவுதான். அடுத்த நொடி அந்தக் குழந்தையின் மின்சாரம் பாய்ந்து தூக்கியடித்தது.

ஒரு பைசா லஞ்சம் இல்லாமல்.. டாஸ்மாக்கில் நடந்த “முதல்” டிரான்ஸ்பர்.. மாஸ் காட்டிய உதயநிதி!

குழந்தையின் அலறலை கேட்ட பெற்றோர் அங்கு வந்து பார்த்த போது குழந்தை மூர்ச்சையாக கிடந்துள்ளது. இதையடுத்து குழந்தையை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அவர்கள் சேர்த்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து அதன் பெற்றோர் அழுத காட்சி கல் மனதையும் கரைக்க செய்வதாக இருந்தது.

ஒரு சிறிய அலட்சியம் ஒரு பிஞ்சின் உயிரையே பறித்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.